ஆப்நகரம்

’தமிழகம் இன்று’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

தமிழகத்தில் இன்றைய நாளின் முக்கிய பேசுபொருளாக இருக்கும் செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் “சமயம் தமிழ்” உடன்...

Samayam Tamil 3 Aug 2020, 11:31 am
புதிய கல்விக் கொள்கை, ரக்‌ஷா பந்தன், பருவமழை, அதிகரிக்கும் கொரோனா தொற்று, ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தமிழகத்தின் முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல் மேலும் பல செய்திகளை இங்கே காணலாம்.
Samayam Tamil Tamil Nadu Rains


தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:

* தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையினை மறுபரிசீலனை செய்து அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்தி கொள்ள வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

* புதிய கல்விக்கொள்கையை நிராகரிக்குமாறு முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன. குறிப்பாக மும்மொழி பாடத் திட்டத்தை திணிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பலிகள் உயரக் காரணம் என்ன? இன்றைய நிலவரம் இதுதான்!

* சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி சகோதரிகள் பரிசுப் பொருட்களைப் பெற்றுச் செல்வர்.

* புதிய கல்விக் கொள்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. இதில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பள்ளிகள் திறப்பு பற்றியும் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

* வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. எனவே தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா? ஆலோசனை நடத்தும் முதல்வர்!

* சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கின்றது.

* தமிழகம் முழுவதும் நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது. இது வரும் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி