ஆப்நகரம்

அக்டோபர் 05: தமிழக கொரோனா நிலவரம்..!

சென்னையில் அதிகபட்சமாக இதுவரை 5,50,759 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Oct 2021, 8:31 pm
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,08,748 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 17,797 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Samayam Tamil representative image


சென்னையில் மட்டும் இன்று 162 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 543408 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 533095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8391 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 231 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 235273 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 230909 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2257
பேர் பலியாகியுள்ளனர்.


செங்கல்பட்டில் இன்று 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,64,976 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,61,406 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,429
பேர் பலியாகியுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல்: கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது அண்ணா பல்கலை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,61,889 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 4,08,00,383 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,793 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 25,56,116 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 34,835 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி