ஆப்நகரம்

பொங்கல் பரிசு வாங்கியாச்சா?- உடனே ரேஷன் கடைக்கு கிளம்புங்க; அப்புறம் வாங்க முடியாது!

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Samayam Tamil 13 Jan 2020, 9:32 am
தமிழகத்தில் வரும் 14, 15, 16, 17 ஆகிய நாட்கள் பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இது தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.
Samayam Tamil Pongal Gift


இதேபோல் நடப்பாண்டிலும் அரிசி ரேஷன் அட்டை கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார்.

ஆனால் உள்ளாட்சி தேர்தல் காரணமாக வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. முதலில் ரொக்கமாக ரூ.1,000 வழங்கப்படும்.

பொங்கல் பண்டிகை : சென்னைவாசிகளை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தும் மெட்ரோ ரயில் நிர்வாகம்!!

இதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை மக்களுக்கு அளிக்கப்படும்.

இதற்காக ரூ.2,363 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகை: 10.5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனிப்பான செய்தி!!

தினசரி 250 முதல் 300 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை வாங்கிய உடன் குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் வந்துவிடும்.

இந்த சூழலில் பொங்கல் பரிசு வழங்குவது இன்றுடன் நிறைவு பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய அமைச்சர் காமராஜ், பொங்கல் பரிசை மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல் : திமுக மீது அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு!!

10 லட்சத்து 59 ஆயிரத்து 745 குடும்பங்களுக்கு இன்று மாலைக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். நேற்று மாலை வரை 94.71% குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

அடுத்த செய்தி