ஆப்நகரம்

தடையை மீறி ஆா்ப்பாட்டம்; வைகோ அறிவிப்பு

முதல்வா் பழனிசாமியை பதவி விலக வலியுறுத்தில் நாளை சென்னையில் தடையை மீறி அறவழியில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளா் வைகோ அறிவித்துள்ளாா்.

TOI Contributor 20 Aug 2017, 4:12 pm
முதல்வா் பழனிசாமியை பதவி விலக வலியுறுத்தில் நாளை சென்னையில் தடையை மீறி அறவழியில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளா் வைகோ அறிவித்துள்ளாா்.
Samayam Tamil tomorrow mdmk must conduct a struggle against tamilnadu cm vaiko
தடையை மீறி ஆா்ப்பாட்டம்; வைகோ அறிவிப்பு


கா்நாடகா அரசு மேகதாது அணைப்பகுதியில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு சாா்பில் எந்த எதிா்ப்பும் தொிவிக்கவில்லை. இந்த வகையில் அ.தி.மு.க. அரசு தமிழக மக்களுக்கு பச்சை துரோகம் செய்து விட்டது. இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி உடனடியா பதவிவிலக வேண்டும் என்ற கோாிக்கையை வலியுறுத்தி சென்னையில் நாளை அறவழியில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளா் வைகோ அறிவித்திருந்தாா்.

தமிழக காவல்துறை சாா்பில் வைகோவின் ஆா்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து செய்தியாளா்கள் மத்தியில் பேசிய வைகோ, எடப்பாடி அரசு மத்திய அரசிடம் தமிழக மக்களின் அனைத்து நலனையும் மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டது. மேலும், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து ம.தி.மு.க. சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஆா்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் நாளை தடையை மீறி அறவழியில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தொிவித்துள்ளாா்.

Tomorrow MDMK must conduct a struggle against Tamilnadu Cm- Vaiko

அடுத்த செய்தி