ஆப்நகரம்

முதுகலை மருத்துவ படிப்பில் சாதித்து, சொந்த கிராமத்தில் மருத்துவ சேவையாற்றும் தமிழன்!

லக்னோ: தான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் இளைஞர் ஒருவர், மருத்துவமனை திறக்க திட்டமிட்டுள்ளார்.

TIMESOFINDIA.COM 31 Oct 2018, 11:08 am
தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தின் காளிப்பட்டி கிராமத்தில் எந்தவித மருத்துவ வசதிகளும் கிடையாது. அதற்காக சுமார் 100 கி.மீ தூரம் வரை பயணிக்க வேண்டும். இது அதே கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த விவசாயி மகனான பி.மேகநாதனைச் சிந்திக்க வைத்துள்ளது.
Samayam Tamil Doctor


ஏனெனில் இவர் படித்து முடித்தது மருத்துவம். கடந்த 30ஆம் தேதி, 2018ஆம் ஆண்டிற்கான சிறந்த குழந்தைகள் மருத்துவருக்கான பண்டிட் ஷித்லா சரண் பாஜ்பாய் தங்கப் பதக்கத்தை மேகநாதன் வென்றுள்ளார்.

இதையடுத்து தனது கிராமத்தில் குழந்தைகள் மருத்துவமனை திறக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். சிறுவயதில் காளிப்பட்டியில் கல்வி கற்றது மேகநாதனுக்கு மிகவும் சிரமமாக இருந்துள்ளது.

அப்போது தனது தந்தையின் அரை ஏக்கர் நிலத்தில் விவசாய வேலைகள் செய்து கொண்டே, பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தினசரி காலை 2 மணிக்கு எழுந்து, காலை 8 மணி வரை மருத்துவ நுழைவுத் தேர்விற்காக படித்து வந்தேன்.

அதன்பிறகு பள்ளிக்குச் சென்று திரும்பி, தந்தையுடன் விவசாய வேலைகள் செய்வேன் என்று கூறுகிறார். இதேபோல் பல் மருத்துவத்தின் முதுகலைப் படிப்பில் சிறப்பாக தேர்ச்சி பெற்றதற்கு டாக்டர் ஸ்நேகிரண் ரகுவன்ஷிக்கு பேராசிரியர் என்.கே.அகர்வால் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் எப்போதும் பல் மருத்துவராக வேண்டும் என்றே விரும்பினேன். எனவே UPPGMEல் 2வது ரேங்க் வாங்கிய உடன், KGMUவில் சேர்ந்து விட்டேன். எனது சகோதரி நோயியல் மருத்துவராக இருக்கிறார்.

எனவே வேறு ஏதேனும் ஒரு பிரிவில் மருத்துவராக விரும்பினேன். அதனால் பல் மருத்துவத்தில் சேர்ந்து விட்டேன் என்றார். மேலும் MDல் சிறந்த குழந்தைகள் மருத்துவராக டாக்டர் அரோஹி குப்தா தேர்ச்சி பெற்று, தாகூர் உல்பாட் சிங் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இது எனது பெற்றோர்களின் கனவு. அதனால் நான் மருத்துவரானேன். அதுமட்டுமல்லாமல் எனது கனவும் அதுவாகவே இருந்தது. எனது நோக்கம் ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் வகையில் என்.ஜி.ஓ திறக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி