ஆப்நகரம்

நெல்லை கனமழை எதிரொலி: சுற்றுலாவுக்குத் தடை

நெல்லை மாவட்டத்தில தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தலையணை, நம்பிக்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

Samayam Tamil 10 Jun 2018, 8:57 am
நெல்லை மாவட்டத்தில தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தலையணை, நம்பிக்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
Samayam Tamil 074230_Nampi temple


நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால், களக்காடு, திருக்குறுங்குடி உள்ளிட்ட ஊர்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நம்பி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் திருக்குறுங்குடி வனப்பகுதியில் உள்ள நம்பிக்கோவிலுக்கு சென்று திரும்பும் பக்தர்கள் ஆற்றைக் கடக்க திண்டாடினர்.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் நூற்றுக்கணக்கானவர்களை பத்திரமாக மீட்டனர். அங்கு தொடர்ந்து மழை பெய்வதால் பாதுகாப்பு கருதி, அப்பகுதிக்கு சுற்றுலா செல்ல மாவட்ட தலைமை வன பாதுகாவலர் தடைவிதித்துள்ளார்.

அடுத்த செய்தி