ஆப்நகரம்

ஊட்டி மலை ரயிலில் ஆசையாய் ஏறி, இப்படி ஏமாந்து போன பயணிகள்- ஏன் தெரியுமா?

சேலத்தைச் சேர்ந்த பொறியாளர் குழுவினர் ஊட்டி மலை ரயில் பாதையில் உரிய சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Samayam Tamil 19 Aug 2019, 1:06 pm
சுற்றுலா பயணிகளை மிகவும் கவரக்கூடிய ரயில்களில் ஒன்று ஊட்டி மலை ரயில். இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் எப்படியாவது ஒருமுறை பயணித்து விட வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரும் விருப்பமாக உள்ளது.
Samayam Tamil Ooty Train


நேற்று காலை வழக்கம் போல் 7.10 மணிக்கு, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகமண்டலத்திற்கு ஊட்டி மலை ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் காலை 8.27 மணியளவில் குன்னூர் அடுத்த அட்டர்லி ரயில் நிலையம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Also Read: வேலூர் அருகே பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி இரு குழந்தைகள் உயிரிழப்பு!

இதில் கற்களும், மண் குவியலுமாக ரயில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன. இதனால் மலை ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த மலை ரயிலில் 70 பயணிகள் இருந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், சேலத்தில் இருந்து பொறியாளர் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

Also Read: தேனியில் பலத்தமழை: வைகை அணையின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 10 அடியை தாண்டியது!

அவர்கள் ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேர காத்திருப்பிற்கு பின், தமிழக அரசு பேருந்து வரவழைக்கப்பட்டு, பயணிகள் குன்னூர் பேருந்து நிலையத்தில் விடப்பட்டனர்.

இதையடுத்து மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு திரும்பிச் சென்றது. ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நேற்று மதியம் 12.30 மணியளவில் நிறைவு பெற்றது. எனவே இன்று முதல் மீண்டும் மலை ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி- விடாத மழையால் சர்ரென்று உயர்ந்து வரும் நீர் நிலைகள்!

அடுத்த செய்தி