ஆப்நகரம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு; அதிகாரிக்கு தொடர்பு; கைதி வாக்குமூலம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேட்டில், தேர்வு வாரிய அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கைதான, கார் டிரைவர் கணேஷ்குமார் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

TNN 29 Dec 2017, 9:46 pm
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேட்டில், தேர்வு வாரிய அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கைதான, கார் டிரைவர் கணேஷ்குமார் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
Samayam Tamil trb polytechnic lecturer recruitment scam cab driver arrested in chennai
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு; அதிகாரிக்கு தொடர்பு; கைதி வாக்குமூலம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. 1,058 காலிபணியிடங்களுக்கு 1,22,000 பேர் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதையடுத்து, பலருக்கும் மதிப்பெண் வித்தியாசம் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 200க்கும் மேற்பட்டோர்க்கு விடைத்தாள் மதிப்பெண்ணை விட கூடுதலாக இருந்ததால், தேர்வு வாரியம் கவனத்திற்கு சென்றது.

இதையடுத்து, தேர்வு வாரியம் நடத்திய அதிரடி விசாரணையில், தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், கூடுதல் மதிப்பெண்ணுக்காக 30 லட்சம் ரூபாய் வரையில் லஞ்சம் பெறப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து, தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் உமா அளித்த புகார் அடிப்படையில், 150 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த சம்பவத்தில் தொடர்புடைய கணேசன் என்ற டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், மதிப்பெண்னை டேட்டா எண்ட்ரி செய்யும் நொய்டா அதிகாரி இந்த முறைகேட்டில் வங்கி மூலம் பணப்பரிமாற்றம் செய்துள்ளார் என்ற கணேசின் வாக்குமூலத்தின் அடிப்படையில், தலைமறைவான அந்த அதிகாரியை போலீசார் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி