ஆப்நகரம்

இந்து என்பதால் கொலை நடக்கவில்லை, போலீஸ் திட்டவட்டம்!

"திருச்சி பாஜக பிரமுகர் கொலை மத ரீதியிலான கொலை அல்ல" எனத் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் திட்டவட்டமாகப் பத்திரிகைகளுக்குக் கூறினார்.

Samayam Tamil 27 Jan 2020, 11:58 pm
திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்த, பாலக்கரை பாஜக மண்டலச் செயலாளரான விஜய ரகு என்பவர்
Samayam Tamil murder34545-1580111964

இன்று காலை பாபு என்கிற மிட்டாய் பாபு, உள்பட அவரது நண்பர்கள் இரண்டு பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவினர் இதனை மத ரீதியிலான கொலை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் (பொறுப்பு ) அமல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

பாஜக பிரமுகர் விஜய் ரகு கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லை குறைந்தபட்சம் இரண்டு வேறு, வேறு மதங்களைச் சார்ந்தவர்கள்.

நல்லா போச்சு சார் என் குடும்பம், நம்பி வீட்டில் விட்டேன்... குடும்பத்தை தொலைத்த கூலி தொழிலாளி..!

அதே நேரத்தில் இந்த கொலை தொடர்பான விசாரணையில் மதத்தின் அடிப்படையில் இந்த சம்பவம் நடக்கவில்லை என காவல் துறை உறுதி செய்துள்ளது.

இந்த கொலை சம்பவத்தில் 3 பேருக்குத் தொடர்பு இருக்கிறது. கொலையாளிகள் குறித்த வீடியோக் காட்சிகள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, விரைவாகக் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். கொலை குறித்து புகார் பெறப்பட்டுள்ளது. யார் கொலை செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றவாளிகள் குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. குற்றம் இழைத்ததாகக் கருதப்படும் நபர்கள் ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

'என்னை கொன்னுட்டு அவ கூட வாழு'... அப்படியே செய்த கணவன்... சென்னையில் பெண் படுகொலை...

முக்கிய குற்றவாளியான பாபு கடந்த, 6 மாதங்களுக்கு முன்பு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, இந்த மாதம் 10ஆம் தேதிதான் பரோலில் வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டுள்ள பாபுவை பிடிக்க, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம்.

"பரோலில் வந்த பாபுவை காவல் துறையினர் சரியாகக் கண்காணிக்கத் தவறியதாகவும், காவல் நிலையத்தில் முறையாகக் கையெழுத்திடவில்லை" என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமல்ராஜ், "அவ்வாறு கவனக்குறைவாகவிருந்து பரோலில் வந்தவரைக் கவனிக்கத் தவறிய காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த செய்தி