ஆப்நகரம்

ஏழைகளை மட்டும் குறிவைக்கும் அரிய நோய்... அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் அபாரம்!!

இந்திய அளவில் முதல் முறையாக, திருச்சி அரசு மருத்துவமனையில் ஏழை விவசாயி ஒருவருக்கு சிறுநீர் பாதை அடைப்பை சரிசெய்யும் அரிய அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

Samayam Tamil 27 Nov 2019, 12:12 am
திருச்சி மாவட்டம், குணசீலம் அருகே கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூக்கன் (வயது 47). விவசாயி. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், நிஷா, அனுசியா, கோகிலா என மூன்று பெண் குழந்தைகள், நிஷாந்த் என்ற ஆண் குழந்தை என நான்கு குழந்தைகள் உள்ளனர்.
Samayam Tamil WhatsApp Image 2019-11-26 at 21.21.34.


கடந்த சில ஆண்டுகளாக, இவர் சிறுநீர் கழிக்க முடியாமல் கடும் அவதிப்பட்டு வந்தார். உள்ளூரில் செய்த சிகிச்சை பலனளிக்காத நிலையில் கடந்தாண்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், சிறுநீர் செல்லும் குழாய் சுருங்கி போகும் அரிய வகை நோய் (Stricture Urethra) இருப்பதை கண்டறிந்தனர்.

இதை சரி செய்வது என்பது மிகவும் கடினமான காரியம் என்பதை அறிந்து, இதற்குரிய சிகிச்சை அளிக்க, திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா தலைமையில், சிறுநீரக மருத்துவ நிபுணர், குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்களை கொண்ட மருத்துவக் குழுவினர் ஆலோசனை செய்தனர்.

இந்தியாவின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை

டாக்டர்கள் ராஜேஷ் ராஜேந்திரன், கண்ணன் கார்த்திகேயன், ராஜசேகரன், சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மூக்கனுக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

ஏழு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின்போது, மூக்கனின் இரைப்பையில் இருந்து ஒரு குழாய் அமைத்து, அந்த குழாயை சிறுநீர் பாதையில் பொருத்தப்பட்டது.

வெற்றிகரமாக நடந்த இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு மூக்கன் நலமாக இருப்பதாகவும், இயல்பாக சிறுநீர் கழிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சையை மேற்கொண்டால், நான்கு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் செலவாகும் என்ற நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சை முழுக்க முழுக்க இலவசமாகவே செய்யப்பட்டிருக்கிறது.

மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சை; 20 நாள் குழந்தைக்கு மூளையில் உறைந்த ரத்தம்!

அரிதினும் அரிது! : இதுபோன்ற அறுவை சிகிச்சை, உலக அளவில் இரண்டாவது முறையாகவும், இந்திய அளவில் முதல் முறையாகவும் செய்யப்படும் அறுவை சிகிச்சையாகும்.

இந்த நோய் வருவதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால், ஏழைகளை மட்டுமே அதிகம் குறிவைத்து வரும் ஒரு நோய் என்பது மட்டுமே, தற்போது அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் மருத்துவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மிகச் சிறப்பான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் குழுவினரை டீன் வனிதா பாராட்டினார். விவசாயி மூக்கன், மருத்துவர்களுக்கு மனம் நெகிழ நன்றி கூறினார்.

அடுத்த செய்தி