ஆப்நகரம்

பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா விலகல்.. அண்ணாமலைக்கு கடைசி அட்வைஸ்..!

பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருச்சி சூர்யா அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 6 Dec 2022, 3:37 pm
தமிழக பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணிடம், ஒபிசி பிரிவு மாநில தலைவர் திருச்சி சூர்யா ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை அடுத்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி சூர்யா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரது பதவியை ஆறு மாத காலத்துக்கு நீக்கி உத்தரவிட்டார்.
Samayam Tamil trichy surya siva
trichy surya siva


மேலும், கட்சியில் அடிப்படை உறுப்பினராக திருச்சி சூர்யா நீடிக்கலாம் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார். இதையடுத்து, திருச்சி சூர்யா தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து முகநூலில் அவர் பதிவிட்டுள்ளது;

அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி, இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் . அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும்.


இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி'' என இவ்வாறு குறிப்பிட்டு பாஜகவில் இருந்து விலகிக்கொள்வதாக திருச்சி சூர்யா சிவா தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி