ஆப்நகரம்

சேலம் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்: இனிமே ஜாலியா போகலாம்!

சேலம் விமானப் போக்குவரத்து சேவை வாரம் மூன்று நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Aug 2020, 8:02 am
கொரோனா பொது முடக்கம் காரணமாக அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில் சென்னை - சேலம் விமானப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 27ஆம் தேதி விமான சேவை தொடங்கப்பட்டது.
Samayam Tamil flights between chennai and salem


ஆனால் நிர்வாக காரணங்களால் ஜூலை இரண்டாவது வாரத்தில் விமான சேவை மீண்டும் நிறுத்தப்பட்டது. பின்னர் ஜூலை 20ஆம் தேதி முதல் வாரத்திற்கு இரு நாள்கள் விமானம் இயக்கப்பட்டு வந்தது. இது ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது விமான சேவை வாரத்திற்கு மூன்று நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமலுக்கு வரும் இந்த முறை மூலம் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் விமான சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் உருவான 40 புதிய அருவிகள்: தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

பயணிகளுக்கு முழு பாதுகாப்பு கவசம், முக தடுப்பான், முகக் கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டுவதாக ட்ரூ ஜெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ஓவ்வொரு முறையும் கிருமி நாசினி கொண்டு விமானம் சுத்தப்படுத்தப்ப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூணாறு நிலச்சரிவு: ஏராளமான தமிழர்கள் பலி - அலட்சியம் காட்டுகிறதா கேரள அரசு?

பொது முடக்கம் காரணமாக இந்தியாவில் இன்னும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பேருந்து, ரயில் போக்குவரத்துக்கு தடை தொடரும் நிலையில் விமானப் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை - சேலம் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி