ஆப்நகரம்

”தர்மமே மறுபடியும் வெல்லும்”-ஆளுநரை சந்தித்த பின் ஓ.பி.எஸ் சூளுரை..!

“கூடிய விரைவில் நல்லதே நடக்கும்’ என தமிழக ஆளுநரை சந்தித்த பின்னர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்துள்ளார்.

TNN 9 Feb 2017, 5:45 pm
“கூடிய விரைவில் நல்லதே நடக்கும்’ என தமிழக ஆளுநரை சந்தித்த பின்னர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்துள்ளார்.
Samayam Tamil truth never failssays ops after met with tamilnadu governor
”தர்மமே மறுபடியும் வெல்லும்”-ஆளுநரை சந்தித்த பின் ஓ.பி.எஸ் சூளுரை..!


தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில்,இன்று மதியம் தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவ் சென்னை வந்தார்.இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,ராஜ்பவனில் தமிழக ஆளுநரை சந்தித்து பேசினார்.அப்போது அவருடன் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன்,முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பானது சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.இதன் பின்னர் கிரீன் வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு ஓ.பி.எஸ் திரும்பினார்.அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர்,”தமிழகத்தில் நடைபெற்று வரும் அத்தனை விபரங்களையும்,ஆளுநரிடம் விரிவாக பேசி வந்துள்ளோம்.உறுதியாக நல்லது நடக்கும்.தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.மறுபடியும் உறுதியாக தர்மமே வெல்லும்.”என தெரிவித்தார்.அதன் பின்னர் தனது சகாக்களுடன் மீண்டும் ஆலோசனையில் ஈடுபடுவதற்காக ஓ.பன்னீர் செல்வம் தனது வீட்டிற்குள் சென்றார்.

'Truth never fails',says OPS after met with Tamilnadu Governor

அடுத்த செய்தி