ஆப்நகரம்

திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: விஐபி தரிசனம் ரத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் மூன்று நாள்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Feb 2022, 11:03 am
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வாரத்தில் 3 நாட்கள் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil tirupati darshan


திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக, ஏழுமலையானை பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி செய்து கொடுத்துள்ளது. அதோடு தற்போது இலவச தரிசன டிக்கெட்டும் கொடுக்கப்பட்டு வருகின்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் இலவச தரிசனம், 300 ரூபாய் கட்டணம், வி.ஐ.பி. கட்டண தரிசனம் ஆகியவற்றின் மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பால் விலை திடீர் உயர்வு: என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?
பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு 30 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிபாரிசு கடிதத்தில் ஒதுக்கப்பட்ட வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பில் அதிரடி: சவாரி போட்ட பெண் காவலர்கள்!
மேலும் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தரிசன நேரத்தை தினமும் 2 மணிநேரம் கூடுதலாக ஒதுக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தொிவித்துள்ளது.

அடுத்த செய்தி