ஆப்நகரம்

உயிரோடு விளையாடுகிறார் எடப்பாடி பழனிசாமி: டிடிவி தினகரன்

டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்து மக்களின் உயிரோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளையாடுகிறார் என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 4 May 2020, 9:07 pm
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்


கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட முழு முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மத்திய அரசு, சில தளர்வுகளையும் அளித்துள்ளது.

இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி மூடப்பட்ட மதுக்கடைகள் வருகிற 7ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3.9 லட்சம் லிட்டர் பீர், 8 லட்சம் லிட்டர் சரக்கு; வருமானத்தை அள்ளிக்கொடுத்த ‘குடி’மகன்கள்!

ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு எல்லைப்பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளதால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளை திறந்து மது விற்பனை செய்ய சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் (TASMAC) கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மிக மோசமானது - கண்டிக்கத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நாள்தோறும் பல நூற்றுக்கணக்கில் அதிகரித்து வரும் சூழலில், மதுக்கடைகளைத் திறப்பது மக்களின் உயிரோடு விளையாடும் செயல். துளியும் பொறுப்பற்ற இந்த நடவடிக்கையைப் பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி