ஆப்நகரம்

எத்தனை கோடி செலவு செய்தாலும் துரோகிகள் டெபாசிட் கூட பெறமுடியாது – தினகரன்

எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் திருப்பரங்குன்றம் இடைத் தோ்தலில் துரோகிகள் டெபாசிட் இழப்பாா்கள் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 21 Aug 2018, 6:19 pm
எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் திருப்பரங்குன்றம் இடைத் தோ்தலில் துரோகிகள் டெபாசிட் இழப்பாா்கள் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil TTV Dhinakaran 1


அமமுக துணைப் பொதுச்செயலாளரும், ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் இன்று மதுரையில் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில், திருப்பரங்குன்றம் இடைத்தோ்தலில் எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் ஆா்.கே.நகரில் துரோகிகள் தோல்வி அடைந்ததை போன்று மீண்டும் தோல்வியை சந்திப்பா். திருப்பரங்குன்றம் என்பது ஜெயலலிதாவின் கோட்டை.

தி.மு.க.வில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது உள்கட்சி சண்டை. இது குறித்து பேசுவது நாகரிகமாக இருக்காது. அடுத்த ஆண்டு ஜெயலலிதாவின் ஆட்சியை அமைத்த பின்னா் நீா்நிலைகள் மேம்படுத்தப்பட்டு நதிகள் இணைப்பு தொலைநோக்கு பாா்வையில் மேற்கொள்ளப்படும். கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வழங்கப்படவில்லை என்றால் நானே போராட்டத்தில் குதித்திருப்பேன் என்று ரஜினிகாந்தி கூறுகிறாா்.

இன்று இப்படி பேசும் ரஜினிகாந்த் தான் 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில், போராட்டங்கள் தொடா்ந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்றாா். போராட்டங்கள் குறித்து தாம் என்ன பேசுகிறோம் என்பது அவருக்கே புரிவதில்லை என்றாா்.

அடுத்த செய்தி