ஆப்நகரம்

மேலூரில் தினகரன் பொதுக்கூட்டம்: 14 எம்.எல்.ஏ., 2 எம்.பி., பங்கேற்பு

மதுரையில் டிடிவி தினகரன் நடத்தும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 14 பேரும் எம்.பி.,க்கள் 2 பேரும் பங்கேற்றுள்ளனர்.

TNN 14 Aug 2017, 6:02 pm
மேலூர்: மதுரையில் டிடிவி தினகரன் நடத்தும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 14 பேரும் எம்.பி.,க்கள் 2 பேரும் பங்கேற்றுள்ளனர்.
Samayam Tamil ttv dhinakarans public meeting begins in madurai
மேலூரில் தினகரன் பொதுக்கூட்டம்: 14 எம்.எல்.ஏ., 2 எம்.பி., பங்கேற்பு


மதுரை மாவட்டம் மேலூரில் டிடிவி தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. முதலில் அனுமதி மறுக்கப்பட்டபோதும் பின்னர் இக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.

இதில் டிடிவி தினகரனுடன் அவரது ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான தொண்டர்களும் திரண்டுள்ளனர்.

அரவக்குறிச்சி என்.எல்.ஏ., செந்தில் பாலாஜி, பாப்பிரெட்டிபட்டி என்.எல்.ஏ., பழனியப்பன், பெருந்துறை என்.எல்.ஏ., தோப்பு வெங்கடாசலம், தஞ்சாவூர் என்.எல்.ஏ., ரங்கசாமி, விளாத்திகுளம் என்.எல்.ஏ., உமா மகேஸ்வரி, சாத்தூர் என்.எல்.ஏ., சுப்ரமணியன், மானாமதுரை என்.எல்.ஏ., கென்னடி மாரியப்பன், கரூர் என்.எல்.ஏ., தங்கதுரை, கம்பம் என்.எல்.ஏ., ஜக்கையன், பெரியகுளம் என்.எல்.ஏ., கதிர்காமு, பெரம்பலூர் என்.எல்.ஏ., வெற்றிவேல், பரமக்குடி என்.எல்.ஏ., முத்தையா ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக பங்கேற்றுள்ளனர். எம்.பி.,க்கள் சிவகங்கை செந்தில்நாதன் மற்றும் கோவை ஏ.பி.நாகராஜன் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி