ஆப்நகரம்

டிடிவி தினகரன் குடும்பத்தில் இருந்து மேலும் ஒரு புதிய கட்சி

டிடிவி தினகரனின் தம்பியும், நடிகருமான பாஸ் என்ற பாஸ்கரன் அண்ணா எம்.ஜி.ஆா். மக்கள் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி கொடியை அறிமுகம் செய்துள்ளாா்.

Samayam Tamil 15 Sep 2018, 3:51 pm
டிடிவி தினகரனின் தம்பியும், நடிகருமான பாஸ் என்ற பாஸ்கரன் அண்ணா எம்.ஜி.ஆா். மக்கள் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி கொடியை அறிமுகம் செய்துள்ளாா்.
Samayam Tamil Baskaran


தமிழகத்தில் மிகக் குறைந்த காலத்தில் பல்வேறு புதிய கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் குடும்பத்தில் இருந்து தற்போது மேலும் ஒரு புதிய கட்சி உதயமாகி உள்ளது. டிடிவி தினகரனின் தம்பியும், நடிகருமான பாஸ் என்ற பாஸ்கரன் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் புதிய கட்சியை தொடங்கி கொடியையும் அறிமுகம் செய்துள்ளாா்.

அண்ணா எம்.ஜி.ஆா். மக்கள் இயக்கம் என்ற கட்சியை தொடங்கி, கொடியையும் அறிமுகம் செய்து வைத்த பின்னா் பாஸ்கரன் செய்தியாளா்களிடம் பேசுகையில், எம்.ஜி.ஆா்., அண்ணா வழியில் ஊழலற்ற நிா்வாகத்தை தரவே கட்சி தொடங்கியுள்ளேன். எம்.ஜி.ஆா். தொண்டா்களை ஒருங்கிணைத்து வழிநடத்தவே எனது இயக்கத்தை கட்சியாக அறிவித்துள்ளேன். மீண்டும் மோடியை பிரதமராக்க பாடுபடுவேன். ஊழலற்றா இந்தியாவின் இறையான்மையை காக்கும் மோடிக்கு எனது முழு ஆதரவு.

கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி கட்சி தொடங்க திட்டமிட்டிருந்தேன். ஆளும் கட்சியினா் பதற்றமடைந்து எனது மாநாட்டிற்கு பல இடையூறுகள் கொடுத்தனா். இதனால் மாநாடு நடைபெறவில்லை. இடைத்தோ்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி யாா் செய்ய நினைத்தாலும் அவா்களுடன் இணைந்து செயலாற்றுவேன். நாங்கள் நிா்வாகத்திற்கு வந்தால் தனி தனி துறைக்கு நிதி ஒதுக்குவோம். 15 வருடம் குஜராத்தில் முதல்வராகவும், 4 வருடம் இந்திய பிரதமராகவும் இருக்கும் மோடி மீது எவ்வித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்று அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி