ஆப்நகரம்

நிகழ்கால பிரச்சனைகள் பற்றி பேசாமல் எதிர்கால விஷன் பற்றி பேசும் தமிழக அரசு : டிடிவி தினகரன்

தமிழக சட்டப்பேரவையின் முதல்கூட்டத் தொடரில் கலந்துகொண்ட டிடிவி தினகரன் தமிழக மக்களின் முக்கிய பிரச்சனைகள் பற்றி அறிக்கை வெளியிடவில்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.

Samayam Tamil 8 Jan 2018, 1:44 pm
தமிழக சட்டப்பேரவையின் முதல்கூட்டத் தொடரில் கலந்துகொண்ட டிடிவி தினகரன் தமிழக மக்களின் முக்கிய பிரச்சனைகள் பற்றி அறிக்கை வெளியிடவில்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.
Samayam Tamil ttv dinakaran speech after first day of assembly
நிகழ்கால பிரச்சனைகள் பற்றி பேசாமல் எதிர்கால விஷன் பற்றி பேசும் தமிழக அரசு : டிடிவி தினகரன்


2018ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடா் இன்று தொடங்கியது. மேலும் பன்வாாிலால் புரோகித் தமிழக ஆளுநராக பதவியேற்ற பின்பு கூடக்கூடிய முதல் கூட்டம் என்பதாலும், டிடிவி தினகரன் முதல் முறையாக சட்டப் பேரவைக்குள் வருவதாலும் இன்றைய கூட்டத்தொடா் மீது மிகுந்த எதிா்பாா்ப்பு காணப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் ஆளுநர் பேசிக்கொண்டிருக்கும் போதே எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் திமுக, காங்கிரஸ் கட்சிகள் சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் முதல்கூட்டத் தொடரில் கலந்துகொண்ட தினகரன் கூறியிருப்பதாவது ‘தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சனைகள் குறித்து எந்த விவாதங்களும் நடைபெறவில்லை. மீத்தேன் திட்டத்தை தடை செய்வது விவசாயிகளுக்கு உதவுவது, கூடங்குளம் அணுமின் நிலையத்தை அமைக்க பயன்படுத்தப்பட்ட தரம் குறைவான பொருட்களால் ஏற்பட்ட சேதம் குறித்து ஏதும் பேசப்படவில்லை. மத்திய கணக்காயர் குழு ஆய்வு அறிக்கையிலேயே கூடங்குளம் கட்டமைப்பில் தரம் குறைந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த மக்களின் பாதுகாப்பு குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. ஆனால் 3 வது, 4 வது அணு உலைகள் அமைப்பது குறித்து பேசுகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, ஓகிபுயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் காணாமல் போன மீனவர்களின் நிலை பற்றியும் பேசப்படவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தருவதாக சொன்ன இருசக்கர வாகனத்திற்கான உதவித்தொகையை நிறைவேற்றுவதாக காகிதத்தில் எழுதப்பட்டதை பற்றியே பேசுகின்றனர். தற்போது நடத்தப்பட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை பற்றி பேசியதாகவும் தெரியவில்லை முக்கிய பிரச்சனைகளை பேசுவதை தவிர்த்துவிட்டு தமிழகத்தின் விஷன் 2030 பற்றி பேசுவதால் என்ன பயன் ஏற்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி