ஆப்நகரம்

பிரதமர் மோடி பேசிய சலூன் கடைக்காரர் யார்?

“நான் ஒரு பேராசிரியர் அல்ல, ஆய்வாளரும் அல்ல, பிறரைப் புத்தகம் படிக்கப் பழக்கப்படுத்துவதன் மூலம் நான் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் கூறுபவர் முடிதிருத்தகம் செய்யும் கடை வைத்து முடி திருத்தம் செய்யும் பொன் மாரியப்பன்.

Samayam Tamil 25 Oct 2020, 12:10 pm
பொன் மாரியப்பன், முடிதிருத்தகம் செய்யும் கடை உரிமையாளர். தூத்துக்குடியில் செயல்படும் இவரது முடி திருத்தகம் செய்யும் கடை, வழக்கமான கடை போல் தெரிந்தாலும் இந்த கடை அளிக்கும் சலுகைகளும், கடையின் உள்கட்டமைப்பும் வேற லெவல்.
Samayam Tamil Library-1578295177


இவர் கடைக்குள் நுழைய வேண்டுமென்றால் சில விதிமுறைகளும் உள்ளது. அதன்படி, முதல் முக்கிய விதிமுறை என்னவென்றால் செல்போன் பயன்படுத்தக் கூடாது. செல்போன் பயன்படுத்தினால் கடையை விட்டு வெளியேற வேண்டும்.


இந்த முடிதிருத்தகம் செய்யும் கடை முழுவதும் புத்தகங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களைப் படித்துவிட்டு அது குறித்து தங்கள் கருத்தைப் பதிவு செய்தால், கருத்துக்கு ஏற்ப தள்ளுபடி வழங்கப்படும்.

காதலனுடன் ஜாலி வாழ்க்கை... இளைஞர்களிடம் பணம் மோசடி... சேலத்தில் கைதான இளம்பெண்...

பொன் மாரியப்பன், கடை முழுவதிலும் புத்தகங்களால் நிரப்பி உள்ளார். 37 வயதாகியுள்ள மாரியப்பன், இப்போதுவரை சுமார் 900 புத்தகங்களைச் சேமித்து வைத்துள்ளார்.

இந்த மாற்றம் எதனால் என்ற கேள்வி இந்த கடையைப் பார்க்கும் அனைவருக்கும் தோன்றுகிறது. இதுகுறித்து மாரியப்பன் கூறியதாவது:
நான் நிறையப் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். சில காரணங்களால் அதைப் படிக்க முடியவில்லை.


இதனால் நான் முடிதிருத்தும் கடையை ஆரம்பித்தவுடன், எனது லட்சியத்தை நிறைவேற்ற வழிகளை யோசித்தேன். அதுதான் இந்த நூலகம்.

போலீஸ் வேனில் நின்றுகொண்டு டிக் டாக் வீடியோ..! காவல்துறை கொடுத்த தண்டனை...

இப்போதைய நேரத்தில் புத்தகங்களைவிட ஸ்மார்ட் போன்களின் பயன்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகிறது. எனது முயற்சி பயனளித்தது. பலர் புத்தகங்கள் மீது காதல் கொள்ள ஆரம்பித்தனர். இதுபோல் மக்கள் புத்தகம் படிப்பதில் ஆர்வம் செலுத்துவதைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். மாரியப்பனின் இந்த முயற்சி, பல தரப்பினரிடமிருந்து பாராட்டுக்களைச் சம்பாதித்து வருகிறது.

அடுத்த செய்தி