ஆப்நகரம்

12 அடி நீளம், கதவை திறந்ததும் வந்த சத்தம், அரசு டாக்டரை கதி கலங்கச் செய்த பாம்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கால்நடை மருத்துவமனையில் பதுங்கியிருந்த 12 அடி நீள சாரை பாம்பை போராடி பிடித்த தீயணைப்புத்துறையினர்

Samayam Tamil 14 May 2021, 9:11 pm
ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது அரசு கால்நடை மருத்துவமனை. இந்த அரசு கால்நடை மருத்துவமனையில் பணியாற்றும் கால்நடை மருத்துவர் ஜெய்கிருஷ்ணன் மருத்துவமனைக்கு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வந்து தனது அறையை திறந்த போது உள்ளே குளிர்சாதன பெட்டிக்கு அடியிலிருந்து சத்தம் கேட்டுள்ளது .
Samayam Tamil சாரை பாம்பு


பின்னர் சத்தம் வந்த இடத்தை நோக்கி பார்த்தபோது பெரிய அளவிலான பாம்பு ஒன்று படுத்திருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் குளிர்சாதன பெட்டிக்கு அடியில் இருந்த சுமார் 12 அடி நீளமுள்ள சாரை பாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராடி லாவகமாக மடக்கிப்பிடித்து உயிருடன் வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

தமிழக அரசின் புதிய ஊரடங்கு கட்டுப்பாட்டின் படி தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

12 நீளமுள்ள பாம்பு இருப்பது தெரியாமல் தனது அறைக்குள் சென்று அலறிய மருத்துவர் கடைசியில் பாம்பு பிடிபட்ட பின்னர் பெரு மூச்சு விட்டார்.

அடுத்த செய்தி