ஆப்நகரம்

corona deaths: தமிழ்நாட்டில் இன்னைக்கு 23 பேர் பலி..! பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

Samayam Tamil 11 Jun 2020, 6:52 pm
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று 1875 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,716 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil chennai corona cases today


இன்று சென்னையில் அதிகபட்சமாக 1406 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 27,398 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1372 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,705 ஆக உயர்ந்துள்ளது.


இன்றும் 23 பேர் கொரோனவால் பலியாகியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்படும் 17,659 பேர் உள்ளனர்.

அடுத்த செய்தி