ஆப்நகரம்

BJP: இதை மட்டும் செய்யுங்கள் நான் பாஜக.,வின் இணைய தயார் : உதயநிதி ஸ்டாலின் டுவிட்

பாஜக.,வில் இணைய தயாராக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார்.

Samayam Tamil 24 Jan 2019, 10:41 pm
பாஜக.,வில் இணைய தயாராக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார்.
Samayam Tamil Udhayanidhi-stalin


சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சூடான டுவிட்டுகளை தட்டிவிட்டுக் கொண்டிருக்கின்றார் உயதநிதி ஸ்டாலின். அவர் மீது பல முறை வைக்கப்பட்டு வரும் குடும்ப அரசியல் மையப்படுத்தி விமர்சிக்கப்படுவதற்கு பதிலளித்து வருகின்றார். அவர் தற்போது பாஜக இளைஞர் அணி தமிழக துணைத்தலைவருக்கு பதிலளித்துள்ள டுவிட் வைரலாகி வருகின்றது.

எஸ்.ஜி. சூர்யா டுவிட்:

பாஜக இளைஞரணி தமிழக துணைத்தலைவர் எஸ்.ஜி. சூர்யா பதிவிட்டுள்ள டுவிட்டில், “பிரியங்கா காந்தி காங்கிரஸில் பதவி பெற்றது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “திமுகவினர் ராகுல் காந்தியும், பிரியங்காவும், கனிமொழியும் பதவி பெறுவதைப் பற்றி பேசுவதே இல்லை. குடும்ப அரசியல் குறித்து திமுகவினர் பேசுவதே கிடையாது.

ஆனால் அவர்களை தமிழிசையுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். தமிழிசை குடும்ப அரசியல் மூலமாக வந்ததாக கூறுகின்றனர். அவர் குடும்பம் மூலமாக இந்த நிலைக்கு வரவில்லை. அவர் களத்தில் 15 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். குடும்ப அரசியலால் முன்னேறவில்லை.” என கூறியிருந்தார்.

உதயநிதி பதில் :
அதுமட்டுமல்லாமல், எஸ்.ஜி. சூர்யா ,“உதயநிதிக்கு திமுக.,வின் முரசொலி அறக்கட்டளையில் முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான பணங்களை கட்டுப்படுத்தக்கூடிய பதவி அது. இதையும் திமுகவினர் ஏற்றுக் கொள்வர். ஆனால் தமிழிசை, நிர்மலா சீதாராமனை ஒப்பிட்டு பேசுவர்.” என பதிவிட்டிருந்தார்.

இதற்கு உதயநிதி, “நான் முரசொலி அறக்கட்டளை பதவியில் இருப்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா..? உங்களால் நிரூபிக்க முடிந்தால் நான் பாஜகவில் சேர தயார்... அதுதான் எனக்கு அளிக்கப்பட கூடிய மோசமான தண்டனையாக இருக்கும்'' என்று நெத்தியடி பதிலை அளித்துள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி