ஆப்நகரம்

தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முன்றவரை காப்பாற்றிய போலீசார்

ரயில்வே தண்டவாளத்தில் தலையை வைத்துப் படுத்து தற்கொலைக்கு முயன்ற நபரை ரயில்வே போலீசார் இரண்டு பேர் காப்பாற்றியுள்ளனர்.

TOI Contributor 7 Apr 2017, 3:13 pm
சென்னை: ரயில்வே தண்டவாளத்தில் தலையை வைத்துப் படுத்து தற்கொலைக்கு முயன்ற நபரை ரயில்வே போலீசார் இரண்டு பேர் காப்பாற்றியுள்ளனர்.
Samayam Tamil two cops save man who tried to commit suicide on railway track in chennai
தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முன்றவரை காப்பாற்றிய போலீசார்


ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் கோதண்டராமன், அஜீஷ் ஆகியோர் வழக்கம் போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வியாசர்பாடி ரயில் நிலையத்துக்கு அருகே, தண்டவாளத்தில் தலை வைத்து நபர் ஒருவர் படுத்திருப்பதை கண்டு அதிர்யடைந்துள்ளனர். விரைந்து செயல்பட்ட போலீசார், தண்டவாளத்தில் படுத்திருந்த நபரை பிடித்து இழுத்துள்ளனர். ஆனால், அவர் எழுந்து கொள்ளாமல் அடம்பிடித்ததுடன், தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

அதனையடுத்து, இவரிடம் இப்படி பேசினால் சரிபட்டு வராது என்று எண்ணிய போலீசார், சாதுர்யமாக பேசி, அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தியுள்ளனர். அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தியது தான் தாமதம், அந்த தண்டவாளப் பாதையில் மின்சார ரயில் ஒன்று சீறிப் பாய்ந்துள்ளது. சில நிமிடங்கள், போலீசார் தாமதித்திருந்தாலும், அவரின் உயிர் பிரிந்திருக்கும்.

அதன்பின்னர், அவரிட்டம் நடத்திய விசாரணையில் சென்னை திருவிகா நகரை சேர்ந்த அவரது பெயர் ராஜசேகர் எனவும், வயது 45 எனவும் தெரியவந்துள்ளது. அதன் பிறகு, அவரை சென்னை சென்ட்ரல் அழைத்து வந்து ரயில்வே காவல் ஆய்வாளர் அழகர்சாமியிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் காவல்நிலையத்தில் கண்காணிப்பில் தங்க வைக்கப்பட்ட அவருக்கு, சினேகா தற்கொலை தடுப்பு மையம் என்ற தொண்டு நிறுவனம் மூலம் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
Two cops save man who tried to commit suicide on railway track in Chennai

அடுத்த செய்தி