ஆப்நகரம்

செந்தில் பாலாஜி வழக்கு: நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு!

வாக்குமூலத்தின் நகலைப் பெற அக்டோபர் 5ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி செந்தில்பாலாஜி உட்பட இருவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Sep 2021, 3:16 pm
வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக நேரில் ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட இருவருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil senthil balaji


முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார் செந்தில்பாலாஜி. அப்போதுவேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை அம்பத்துாரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.இதனால் செந்தில்பாலாஜி, அன்னராஜ், பிரபு, சகாயராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, எம்.பிக்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், 47 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நகல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? ஸ்டாலின் ஆடும் மங்காத்தா!
இந்நிலையில், புகார்தாரர்களின் வாக்குமூலங்களைக் குற்றம்சாட்டப்பட்ட 47 பேருக்கும் அளிப்பதற்காக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என். ஆலிசியா முன்பு இன்று (செப்டம்பர் 21) விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில்பாலாஜி, கார்த்திகேயன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
அப்பாடா, நிம்மதி பெருமூச்சு விட்ட ராஜேந்திர பாலாஜி
இதையடுத்து, வாக்குமூலத்தின் நகலைப் பெறுவதற்காக, அக்டோபர் 5ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி செந்தில்பாலாஜி உட்பட இருவருக்கும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.

அடுத்த செய்தி