ஆப்நகரம்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க, தமிழக அரசுக்கு உடன்குடி விவசாயிகள் கோரிக்கை!

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று உடன்குடி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

TIMESOFINDIA.COM 1 Sep 2018, 1:26 am
சென்னை: மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று உடன்குடி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Samayam Tamil Sterlite


தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 100வது நாள் போராட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்றது.

அப்போது வெடித்த வன்முறை சம்பவங்களை அடுத்து, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையில் நிர்வாகப் பணிகள் மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில் தூத்துக்குடி உடன்குடி கிராமத்தைச் சேர்ந்த பசுமை புரட்சி மற்றும் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, முதலமைச்சரின் சிறப்பு பிரிவிற்கு மனு அளித்துள்ளனர். அதில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், உரத் தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன.

ஏனெனில் சல்ப்யூரிக் மற்றும் பாஸ்போரிக் அமிலத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றை ஸ்டெர்லைட் ஆலை விநியோகம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Udankudi farmers urge TN govt to reopen Sterlite.

அடுத்த செய்தி