ஆப்நகரம்

12 சதவீதம் கொரோனா தடுப்பூசிகளை தமிழக அரசு வீணடித்துள்ளது- உதயநிதி

கொரோனா தடுப்பூசிகளை தமிழக அரசு வீணடித்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் குற்றசாட்டு

Samayam Tamil 20 Apr 2021, 9:34 pm
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகியுள்ளது. எனினும் நாடு நாடு தழுவிய ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி இன்றைய உரையில் தெரிவித்துள்ளார். மேலும், பொது முடக்கம் என்பது கடைசி வாய்ப்பு தான். பொது முடக்கத்தை செயல்படுத்தும் போது மாநில அரசுகள் அதனை கடைசி ஆயுதமாக தான் செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் வைத்துள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்


தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பில் நான்காவது இடத்தில் உள்ளது. தற்போதைய சூழலில் ஆக்சிஜனும், தடுப்பூசியும்தான் நாடு முழுக்க பேசும்பொருளாக உள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளை வீணடித்ததில் தமிழகம் முன்னிலையில் உள்ளதாக திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, '' போலியோ-மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை பொதுமக்களிடம் சேர்த்ததில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த தமிழகம், கொரோனா தடுப்பூசிகளை வீணடித்ததில் முதலிடத்தில் உள்ளது. ஏப்ரல் வரை நமக்கு அனுப்பப்பட்ட 54.28 லட்சம் தடுப்பூசிகளில் 12.10% வீணாகியுள்ளது.

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

தகவலறியும் உரிமைசட்டம் மூலம் மத்திய அரசு தந்த இத்தகவல், அடிமை அரசின் நிர்வாக குளறுபடியை காட்டுகிறது. கொரோனா தடுப்பூசிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றை மக்களிடம் சேர்க்கும் பணியை ஒருங்கிணைக்காமல், இறுதிகட்ட கொள்ளை-போலி விளம்பரங்களில் கவனம் செலுத்தியதே இதற்கு காரணம்.

இப்படி மக்கள் மீது அக்கறையற்ற அடிமை அரசால், கொரோனா 2-ம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4-ம் இடத்தில் உள்ளது. கொரோனா உயிரிழப்புகளுக்கும் சேதாரங்களுக்கும், கொள்ளையில் மட்டுமே கவனம் செலுத்திய அடிமைகளும்-அவர்களை ஆட்டுவிக்கும் ஆதிக்கவாதிகளுமே பொறுப்பு'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி