ஆப்நகரம்

'தமிழக வேலைக்கு மும்பையில் தேர்வு நடத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்' - உதயநிதி

கல்பாக்கம் அணுமின் நிலைய வேலைகளுக்கு சென்னையில் தேர்வு முகாம் அமைக்கக்கோரி உதயநிதி வலியுறுத்தல்

Samayam Tamil 18 Jan 2021, 9:28 pm
Samayam Tamil file pic
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் Stipendiary Trainees Categories I, II & Category II (C) ஆகிய பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் கல்பாக்கத்தில் உள்ள காலியிடங்களுக்கான பணி நியமன எழுத்துத் தேர்வுகள் மும்பையில் மட்டுமே நடைபெறுமென்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தேர்வர்களை கோவிட் சூழலில் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்குவதாகும். மேலும் விளிம்பு நிலைப் பிரிவுகளைச் சார்ந்த தேர்வர்கள் கூடுதலான நிதிச் சுமைக்கும் ஆளாக வேண்டியிருக்கும். எனவே, எழுத்துத் தேர்வுகளுக்கான இன்னொரு மையத்தை சென்னையில் அமைக்குமாறு தேர்வர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக பணியிடங்களுக்கு தேர்வெழுதும் ஏழை, எளியோர்களால் மும்பை வரை பயணிப்பதில் நெருக்கடி ஏற்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்து வலியுறுத்தியுள்ளார்.

அதில், '' கல்பாக்கம் அணுமின் நிலைய ஃபிட்டர்-வெல்டர் பணிகளுக்கு ஊதியத்துடன் கூடிய பயிற்சிக்கான தேர்வுகளை மும்பையில் மட்டும் நடத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்காக 2 முறை மும்பை செல்ல வேண்டுமென்ற அறிவிப்பாணையை படித்ததுமே இப்பணியே வேண்டாமென தமிழக இளைஞர்கள் விலகும் சூழல் உருவாகியுள்ளது.

புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது: நடிகர் விஜய் கடும் எச்சரிக்கை!

ஐ.டி.ஐ & பட்டயப்படிப்பை தகுதியாகக் கொண்ட இப்பணிகளுக்கான பயிற்சிக்கு எழுத்து தேர்வோடு நேர்காணலும் நடத்தப்படுவது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது. இத்தேர்வினை தமிழகத்தில் நடத்துவதோடு, இந்தப்பணிகள் தமிழக இளைஞர்களுக்கே கிடைக்க மத்திய-மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும்'' என இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி