ஆப்நகரம்

டாக்டர் ஆகவேண்டிய அனிதா...எடப்பாடிக்கு டாக்டர் பட்டமா; உதயநிதி தாக்கு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளதாக எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

Samayam Tamil 17 Oct 2019, 6:17 pm
நாங்குநேரி: டாக்டர் ஆகவேண்டிய அனிதா அரசால் உயிரிழந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டமா என திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Samayam Tamil udhayanidhi stalin


பொதுவாக பல்கலைக்கழகங்கள் சார்பில் பல்வேறு துறையினருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். பிரபலங்கள், அரசியல் தலைவர்களுக்கும் அவ்வப்போது இந்த கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது உண்டு. அந்த வரிசையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளதாக எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வருகிற 20ஆம் தேதி நடைபெறும் விழாவில் முதல்வர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கும் பல்கலைக்கழகம்!!

இந்நிலையில், நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், டாக்டர் ஆகவேண்டிய அனிதா அரசால் உயிரிழந்தார். இப்போது எடப்பாடிக்கு டாக்டர் பட்டமா என விமர்சித்துள்ளார்.

‘அசுரன் படமல்ல, ஸ்டாலினுக்கான பாடம்’: ராமதாஸ்!

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த அனிதா எனும் மாணவி, கடந்த 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1156 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் வாய்ப்பை இழந்த அனிதா, நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சட்டப்போராட்டம் நடத்தியும் தனது மருத்துவ கனவு நிறைவேறாத காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில், அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி