ஆப்நகரம்

9 மணி நேரம் காவலில் வைக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின்!

குத்தாலத்தில் கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுமார் 10 மணி நேரத்துக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

Samayam Tamil 22 Nov 2020, 11:50 pm
தமிழகம் மீட்போம் என்ற கொள்கைப் பிரகடனத்துடன் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பிரசார பயணத்தை திமுக தொடங்கியுள்ளது. அதன் தொடக்கமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 20ஆம் தேதி சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு மரியாதை செலுத்தி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
Samayam Tamil உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்


திருக்குவளையில் உள்ள கலைஞர் கருணாநிதி வீட்டு வாசலில் அமைக்கப்பட்ட மேடையில் தொண்டர்கள் மத்தியில் முதல் நாள் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுகவினர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நாகப்பட்டிணம் மாவட்டம் குத்தாலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். அனுமதி இன்றி பிரசாரம் செய்ததாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 3 நாள் பிரச்சாரத்தில் 3ஆவது முறையாக உதயநிதி கைது செய்யப்பட்டது தொடர்ந்து போலீசார் - திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினி எங்கே? வீட்டில் இருந்து வந்த பதில்களும் பரவிய வதந்திகளும்...

இதனைத்தொடர்ந்து, தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுகவினர் நீண்ட நேரமாகியும் விடுதலை செய்யப்படாமல் இருந்தனர். இதனைக் கண்டித்து திமுகவினர் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அதன் தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின் சுமார் 9 மணி நேரத்துக்கு பின்னர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் பிரச்சார பயணத்தை தடுத்து மதியம் 2மணிக்கு கைது செய்தவர்கள் இரவு 11 வரை விடவில்லை. அதிரடிப்படை-ஆயுதம் ஏந்திய போலீஸ் என மிரட்டிப்பார்த்தனர். எனினும், நம் கழகத்தினரின் கொந்தளிப்பை சமாளிக்க முடியாமல் தற்போது விடுவித்துள்ளனர். எனது பயணத்தை திட்டமிட்டபடி தொடர்கிறேன்” என்று உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி