ஆப்நகரம்

தேர்தல் துணை ஆணையர் உமேஷ் சின்ஹா நாளை தமிழகம் வருகை

தேர்தல் துணை ஆணையர் உமேஷ் சின்ஹா நாளை தமிழகம் வரவுள்ளார் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

TNN 8 Nov 2016, 1:52 pm
சென்னை: தேர்தல் துணை ஆணையர் உமேஷ் சின்ஹா நாளை தமிழகம் வரவுள்ளார் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil umesh sinha will come to tmailnadu tomorrow
தேர்தல் துணை ஆணையர் உமேஷ் சின்ஹா நாளை தமிழகம் வருகை


கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து, தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர் உயிரிழந்த காரணத்தால் அங்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் நிலவியது. இதனிடையே, தேர்தல் ரத்தான இரண்டு தொகுதிகள் உள்பட மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 19-ம் தேதியன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதேபோல், புதுவை முதல்வராக உள்ள நாராயணசாமி போட்டியிடுவதற்கு வசதியாக நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த தொகுதிக்கும் வருகிற நவம்பர் மாதம் 19-ம் தேதியன்றே தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தஞ்சை, அரவக்குறிச்சி , திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தேர்தல் துணை ஆணையர் உமேஷ் சின்ஹா நாளை தமிழகம் வரவுள்ளார் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

நவம்பர் 9-ம் தேதி (நாளை) முதல் 11-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள மூன்று தொகுதிகள் மற்றும் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிகளை துணை ஆணையர் ஆய்வு செய்ய உள்ளார். அதேபோல், தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளின் தேர்தல் செலவினங்கள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ள பொது இயக்குநர் (செலவினம்) திலீப் சர்மாவும் நாளை தமிழகம் வரவுள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
Umesh sinha will come to Tmailnadu tomorrow

அடுத்த செய்தி