ஆப்நகரம்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை நிலவுகிறது : முன்னாள் நீதிபதி கட்ஜு

தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை நிலவுவதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு குற்றம்சாட்டியுள்ளார்.

TNN 11 Apr 2017, 4:13 pm
டெல்லி : தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை நிலவுவதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil undeclared emergency situation in tamilnadu former supreme court judge markandey katju
தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை நிலவுகிறது : முன்னாள் நீதிபதி கட்ஜு



தமிழர்களின் பிரச்சனைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு. ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பலவற்றிற்கு தமிழர்களுக்கு துணையாக பல்வேறு கருத்து களை கட்ஜு தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்தநிலையில் தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுகிறது என்று முன்னாள் நீதிபதி கட்ஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூற்டும் போது, "டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, போராட்டம் நடத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும், 4 பேருக்கு மேல் தமிழகத்தில் எங்கு கூடினாலும், போலீசார் அவர்களை விரட்டிவிடுவதாகவும் தனக்கு புகார்கள் வருவகிறது.

1975ம் ஆண்டு, பிரிவு 352ன்கீழ், இந்தியாவில் அவசர நிலை (எமர்ஜென்சி )பிரகடனம் செய்யப்பட்டது. அதன்படி, அடிப்படை உரிமைகளான பேச்சு உரிமை, கருத்து உரிமை மறுக்கப்பட்டது. ஆயுதமின்றி போராட்டம் நடத்தும் உரிமையும் பறிக்கப்பட்டது . தற்போது தமிழகத்திலும் எமர்ஜென்சி உள்ளது. ஆனால், அறிவிக்கப்படவில்லை அவ்வளவுதான். ஆயுதங்கள் இன்றி போராட்டம் நடத்த வழங்கப்பட்டுள்ள உரிமை தமிழகத்தில் பறிக்கப்பட்டுள்ளது." என்று கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.
undeclared emergency situation tamilnadu : former supreme court judge markandey katju

அடுத்த செய்தி