ஆப்நகரம்

சுயலாபத்திற்காக மேம்பாலம் கட்டுகிறார் பொன்னார்- வியாபாரிகள் குற்றச்சாட்டு

யாருமே கேட்காத இடத்தில் மேம்பாலம் தேவை இல்லை என கூறி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதம் நடத்தினர்.

Samayam Tamil 5 Feb 2019, 3:49 pm
யாருமே கேட்காத இடத்தில் மேம்பாலம் தேவை இல்லை என கூறி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதம் நடத்தினர்.
Samayam Tamil ponnar.


மத்திய இணை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கோட்டார், தக்கலை உள்ளிட்ட இடங்களில் மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளார். தக்கலையில் 1.5 கி.மீ தூரத்தில் 100 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ளதாகவும், வரும் 19 ம் தேதி மோடி அடிக்கல் நாட்டை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நான்கு வழி சாலை பணி நடந்து வருவதால், போக்குவரத்து நெரிசல் இருக்காது. இதுபோன்ற பாலங்களால் அரசு பணம் வீணடிக்கப்படுவதாகவும், தனது சுய லாபத்திற்காகவும், பத்மநாபபுரம் நகர வியாபாரமே முடங்கி, வியாபாரிகள் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தக்கலையில் மேம்பாலம் அமைக்கும் மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கு எதிர்ப்பு தெரிவித்து தக்கலையில் வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி