ஆப்நகரம்

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய நீதிமன்றம்; இது என்ன கோர்ட்டா, அதிமுக அலுவலகமா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் மாநிலம் முழுவதும் அதிமுகவினரால் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது

Samayam Tamil 5 Dec 2019, 3:52 pm
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி நீதிமன்ற வளாகத்தில் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ஜெயலலிதாவுக்கு நீதிமன்றத்தில் அஞ்சலி
ஜெயலலிதாவுக்கு நீதிமன்றத்தில் அஞ்சலி


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ். தலைமையில் ஏராளமான தொண்டர்கள் வாலாஜா சாலை வழியாக பேரணியாக சென்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தமிழகத்தின் ’இரும்பு பெண்மணி’க்கு இன்று 3ஆம் ஆண்டு நினைவு தினம்!

அதுதவிர மாநிலம் முழுவதும் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா அரசின் முத்தான மூன்று திட்டங்கள் !!

ஒரு கட்சியின் தலைவர் மற்றும் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கு கட்சி சார்பிலோ, அரசு சார்பிலோ விழா எடுக்கலாம்; நிகழ்ச்சிகள் நடத்தலாம். உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தலாம். அதில் தவறில்லை. ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு நீதிமன்ற வளாகத்தில் மரியாதை செலுத்தப்பட்டதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஒருவேளை ஜெயலலிதா உயிரோடிருந்தால் முதல் குற்றவாளி என்ற நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் தானே இருந்திருக்க முடியும். அப்படி இருக்கும் போது, அவரது படத்திற்கு நீதிமன்ற வளாகத்தில் மரியாதை செலுத்துவது உகந்ததா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

3 ஆண்டுகள் கடந்தும் ஜெயலலிதா மரணத்தில் நீங்காத மர்மம்!

முன்னதாக, ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிரான வழக்கில், ஜெயலலிதாவை குற்றவாளி என கூற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி