ஆப்நகரம்

அரசுப் போக்குவரத்து கழகங்களில் காலி பணியிடங்கள்: எப்போது வெளியாகும் அறிவிப்பு?

அரசு போக்குவரத்து கழகங்களில் 4000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 20 Oct 2021, 6:56 am
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட பல பணியிடங்கள் காலியாக உள்ளன.
Samayam Tamil tn govt bus


ஒரு பேருந்துக்கு ஆறு பேர் என்ற கணக்கில் போக்குவரத்து கழகங்களில் 1.28 லட்சம் பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது ஒரு பேருந்துக்கு ஐந்து பேருக்கும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

முக்கியமாக ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல பேருந்துகளை இயக்க முடியாத நிலை உள்ளதாக போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்தவர்களே கூறுகின்றனர்.

25,000 ரூ வேண்டுமா? பள்ளிக் கல்வித் துறை சூப்பர் அறிவிப்பு!

வரும் மே மாதம் 5000 பேர் வரை ஓய்வு பெற உள்ள நிலையில் அவர்களில் பலர் விடுப்பில் சென்றுள்ளனர். இதனாலும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் 4000 காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

மக்களுக்கு அதி முக்கிய சேவையை வழங்கும் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 26 அரசுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றார். தமிழ்நாட்டின் மொத்த கடனில், 10% கடன்கள் மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்து துறைக்கு செலவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

திமுக அரசில் ஊழல்? அமைச்சர் மகன் கொண்டாடும் டெண்டர் தீபாவளி!

ஒரு அரசுப் பேருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தால் அரசுக்கு 59.15 ரூ செலவாகிறது என அமைச்சர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி