ஆப்நகரம்

தடுப்பூசி போட்டா கேன்சர்லாம் வராது: வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்

நோய் எதிர்ப்பு சக்திக்காக தடுப்பூசி போட்டால், புற்றுநோய் வராது என்று கூறி, வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 3 May 2017, 3:14 pm
சென்னை: நோய் எதிர்ப்பு சக்திக்காக தடுப்பூசி போட்டால், புற்றுநோய் வராது என்று கூறி, வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil vaccination cant cause cancer concludes madras hc
தடுப்பூசி போட்டா கேன்சர்லாம் வராது: வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்


ஈரோட்டைச் சேர்ந்த அன்பரசு(6) என்ற சிறுவனுக்கு அம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ரத்தக்கட்டு ஏற்பட்டு, பெரியதாகியுள்ளது. பின்னர் 3 கிலோ எடையில் புற்றுநோய் கட்டியாக உருவெடுத்துள்ளது. ரூ.3 லட்சம் வரை செலவழித்த நிலையில், புற்றுநோய் கட்டி குணமாகவில்லை. இதுதொடர்பாக செய்தித்தாளில் வெளியான செய்தியை கண்டு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர், ஈரோடு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், குழந்தைகள் நல வாரிய ஆணையர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிறுவனின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து நோய் எதிர்ப்பு தடுப்பூசி காரணமாகத்தான் புற்றுநோய் ஏற்பட்டதா? என்று எயிம்ஸ், டாடா நினைவு மருத்துவமனை மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் அறிக்கையின் படி, தடுப்பூசியால் புற்று நோய் கட்டிகள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய விசாரணை இல்லாமல் செய்தித்தாள் இந்நிகழ்வை வெளியிட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்மூலம் அரசின் மருத்துவ நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படும் என்றும் குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளது.

Vaccination can’t cause cancer, concludes Madras HC.

அடுத்த செய்தி