ஆப்நகரம்

25 ஆண்டுகளுக்கு பின்னரும் தொடரும் வாச்சாத்தி துயரம்!

வாச்சாத்தி வன்கொடுமை நடந்து 25 ஆண்டுகள் ஆனபின்னரும் கூட இன்னும் அம்மக்கள் மீளா துயரில் தான் உள்ளனர்.

TOI Contributor 23 Jun 2017, 8:55 am
வாச்சாத்தி வன்கொடுமை நடந்து 25 ஆண்டுகள் ஆனபின்னரும் கூட இன்னும் அம்மக்கள் மீளா துயரில் தான் உள்ளனர்.
Samayam Tamil vachathi tragedy continues after 25 years
25 ஆண்டுகளுக்கு பின்னரும் தொடரும் வாச்சாத்தி துயரம்!


தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி கிராமத்து மக்களால் ஜூன் மாதத்தை மறக்க இயலாது. 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஏற்படுத்திக்கொண்ட பாவத்தை எங்கு சென்றாலும் கழுவ முடியாது. சந்தன கட்டை கடத்தியதாக குற்றம் சாட்டி எல்லா வீடுகளில் இருந்தும் 90 பெண்கள், 98 சிறுவர்கள் மற்றும் 15 ஆண்கள் என மொத்தம் 133 பேரை இழுத்து வந்தனர்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு வனத்துறையினர் அந்த மக்களை கொடுமை படுத்தினர். பெண்களை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கினர். மக்களின் வீடுகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. இத்தனை கொடுமைகளை அனுபவித்த வாச்சாத்தி மக்களின் புகாரை வாங்கக்கூட எவரும் முன்வரவில்லை. 1992ஆம் ஆண்டு இந்த பிரச்னை குறித்து நல்லசிவம் எம்பி நாடாளுமன்றத்தில் பேசினார். அதன் பின்னரே இந்த பிரச்னை தீவிரம் அடைந்தது.

மேலும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் 2011ஆம் ஆண்டு நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 கோடியே 24 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் இந்த 5 ஆண்டுகளில் 62 லட்ச ரூபாய் மட்டுமே வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். இங்கு மிகவும் தாமதமாக கிடைத்த நீதி இன்னும் மறுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. 25 ஆண்டுகள் ஆனாலும் கூட அந்தக்கொடுமையின் வடு இன்னும் மாறவில்லை. துயரங்களை சுமந்தவாறே தான் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

அடுத்த செய்தி