ஆப்நகரம்

Vaiko: பிரதமருக்கு எதிரான வைகோ போராட்டத்தில் பாஜக தொண்டர்கள் கல்வீச்சு - காவல்துறையினர் தடியடி

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடத்திய போராட்டட்தில் மதிமுக தொண்டரக்ள் மீது பாஜகவினர் கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 1 Mar 2019, 2:17 pm
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடத்திய போராட்டட்தில் மதிமுக தொண்டரக்ள் மீது பாஜகவினர் கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil vaiko


கன்னியாகுமரிக்கு இன்று வரும் பிரதமர்மோடி, ராமேஷ்வரம்- தனிஷ்கோடி இடையே ரயில் தொடர்பை ஏற்படுத்தும் வகையில்,ரூ.208 கோடியில் புதிய திட்டத்தை மோடி அடிக்கல் நாடுகிறார்.

இதைத்தொடர்ந்து புதிய பாம்பன் பால கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார். இதனையடுத்து மதுரை- சென்னை இடையே அதி நவீன தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமையில் திருநெல்வேலி காவல் கிணறு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதிமுக கூட்டத்தில் புகுந்த பாஜக தொண்டர்களால் அடிதடி ஏற்பட்டது. மோடிக்கு கறுப்புக்கொடி காட்ட காத்திருந்த மதிமுகவினருக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அவர்கள் மீது பாஜகவினர் கல்வீச்சு நடத்தினர். நிலையை கட்டுபாட்டிற்குள் கொண்டுவர காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் காவல்கிணற்று பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

அடுத்த செய்தி