ஆப்நகரம்

பிரதமரையும் மதிப்பதால்தான் கடிதம் எழுதியிருக்கிறார்கள் : வைரமுத்து ட்வீட்

49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு குறித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்..

Samayam Tamil 5 Oct 2019, 6:05 pm
பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதிய 49 ஆளுமைகளின் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil vairamuthu tweet about anti national case on celebrities
பிரதமரையும் மதிப்பதால்தான் கடிதம் எழுதியிருக்கிறார்கள் : வைரமுத்து ட்வீட்


மூத்த வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, தமிழ் திரைப்பட இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி, நடிகரும், இயக்குனருமான அனுராக் காஷ்யாப் ஆகியோர் உள்ளிட்ட 49 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரணம், சிறுபான்மையினர் நலன் மற்றும் நாட்டில் மதத்தின் பெயரால் நிலவும் வன்முறை ஆகியவற்றை எதிர்த்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர் என்பதுதான்.

ஒரு நாட்டின் பிரதமருக்கு, அந்த நாட்டின் பிரஜை கடிதம் எழுதுவது தேசத்துரோகமா? என்ற கேள்வியை அழுத்தமாக கேட்கவைக்கும் நிகழ்வாக இந்த நடவடிக்கை உள்ளது. மேலும் வழக்குப்பதிவு நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு துறையை சேர்ந்த பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் இதுகுறித்து தெரிவித்ததாவது “தேசத்தை நேசிப்பவர்கள், பிரதமரையும் மதிப்பதால்தான் அவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். இது எப்படி தேசத் துரோகமாகும்? வியப்பு; வேதனை. “என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி