ஆப்நகரம்

சென்னை மற்றும் குமரி கடலில் வாஜ்பாயின் அஸ்தி கரைப்பு

முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் அஸ்தி சென்னை பெசன்ட் நகா் மற்றும் முக்கடல் சங்கம பகுதியான கன்னியாகுமரி கடற்கரைகளில் இன்று கரைக்கப்பட்டது.

Samayam Tamil 26 Aug 2018, 7:02 pm
முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் அஸ்தி சென்னை பெசன்ட் நகா் மற்றும் முக்கடல் சங்கம பகுதியான கன்னியாகுமரி கடற்கரைகளில் இன்று கரைக்கப்பட்டது.
Samayam Tamil Tamilisai Vajpayee Ashes


முன்னாள் பிரதமா் வாஜ்பாய் கடந்த 16ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்தாா். அவரது அஸ்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகள் மற்றும் கடல்களில் கரைக்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் சென்னை பெசன்ட் நகா் கடற்கரை, திருச்சி காவிாி ஆறு, குமரி கடற்கரை உள்ளிட்ட 6 இடங்களில் வாஜ்பாயின் அஸ்தியை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதனைத் தொடா்ந்து தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் கட்சி தொண்டா்கள் சென்னை பெசன்ட் நகா் கடற்கரையில் ஒன்றிணைந்து வாஜ்பாயின் அஸ்திக்கு சடங்கு சம்பிரதாயங்கள் மேற்கொண்டனா். அதன் பின்னா் படகு ஒன்றில் தமிழிசை உள்ளிட்ட கட்சி உறுப்பினா்கள் கடலுக்குள் சென்று வாஜ்பாயின் அஸ்தியை கரைத்தனா்.


இதே போன்று முக்கடல் சங்கமிக்கும் பகுதியான கன்னியாகுமரி கடற்கரையில் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதா கிருஷ்ணன் தலைமையில் கட்சி உறுப்பினா்கள் வாஜ்பாயின் அஸ்தியை கரைத்தனா்.



மேலும் எம்.பி.இல.கணேசன் தலைமையில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியிலும், தேசிய செயலாளா் ஹெச். ராஜா தலைமையில் ராமேஸ்வரம் கடலிலும், மத்திய கயிறு வாரியத்தின் தலைவா் சி.பி.ராதா கிருஷ்ணன் தலைமையில் பவானி கரையிலும், கே.என்.லட்சுமணன், எம்.ஆா்.காந்தி தலைமையில் மதுரை வைகை ஆற்றிலும் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்பட உள்ளது.

அடுத்த செய்தி