ஆப்நகரம்

வாஜ்பாய் தமிழ் மொழியின் மீது அளவற்ற பற்றுகொண்டவர்: திருமாவளவன்!

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக தனது 93-வது வயதில் நேற்று காலமானார்.

Samayam Tamil 17 Aug 2018, 12:37 pm
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக தனது 93-வது வயதில் நேற்று காலமானார்.
Samayam Tamil thiru
வாஜ்பாய் தமிழ் மொழியின் மீது அளவற்ற பற்றுகொண்டவர்: திருமாவளவன்!


அவரது மறைவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ''பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடி கைதானவர்; அவசரநிலை காலத்தில் சிறைப்படுத்தப்பட்டவர், ஜனதா கட்சியின் தலைமையிலான ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராகத் திறம்பட செயல்பட்டவர்.

தமிழ் மொழியின் மீது அளவற்ற பற்றுகொண்ட வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டுக்கு பல வளர்ச்சித் திட்டங்களை வழங்கினார். தங்கநாற்கர சாலை திட்டம் அவர் ஆட்சிக்காலத்தில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வாஜ்பாய் அதைக் கடுமையாக எதிர்த்தார். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான முடிவு என அதை விமர்சித்த அவர் கச்சத்தீவை மீட்பதற்கு அப்போது திமுக உறுப்பினர்களோடு இணைந்து குரல் எழுப்பினார்.

அவர் பிரதமராக இருந்த காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு நம்பகமான தோழனாக இந்தியா விளங்கியது. கடந்த 9 ஆண்டுகளாக உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாய் மத, இன, மொழி வேறுபாடின்றி குடிமக்கள் அனைவரையும் சமமாகக் கருத வேண்டும் என்ற கொள்கை மீது பற்றுள்ளவராகத் திகழ்ந்தார்.

அவரைப் பிரிந்து வாடும் உறவினர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்''. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி