ஆப்நகரம்

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு விலங்குகள், பறவைகள் அளித்த மைசூரு பூங்கா!

மைசூருவில் இருந்து சில விலங்குகள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Aug 2018, 10:18 pm
சென்னை: மைசூருவில் இருந்து சில விலங்குகள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Zoo


சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு மைசூரு ஸ்ரீ சாமராஜேந்திரா உயிரியல் பூங்காவில் இருந்து சில விலங்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் நரி, பொன்னிற பறவை, நாரை, கருநிற வாத்து, கிளிகள் உள்ளிட்டவை அடங்கும்.

விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், இவை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் வண்டலூர் பூங்காவில் இருந்து, வெள்ளை புலிகள், காட்டெருமைகள், குரங்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அளிக்கப்பட்டுள்ள விலங்குகள் தனித்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

3 வாரங்களுக்கு உடல் ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் பார்வையாளர் பகுதிக்கு கொண்டு வரப்படும். இதுதொடர்பாக பேசிய மூத்த பூங்கா அதிகாரி, விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் மூலம், புத்துணர்ச்சி மிக்க சூழல் உருவாகும் என்றார்.

மத்திய விலங்குகள் மேலாண்மை அமைப்பு மூலமாக, அனைத்து விலங்குகள் குறித்த தகவல் ஆன்லைனில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. எப்போதெல்லாம் விலங்குகள் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் ஆன்லைன் டேட்டா மூலம் தகவல் பெற்றுக் கொள்ளலாம்.

Vandalur zoo gets animals, birds from Mysore zoo.

அடுத்த செய்தி