ஆப்நகரம்

விஏஒ தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான (விஏஒ) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

TNN 1 Jul 2016, 5:37 pm
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான (விஏஒ) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
Samayam Tamil vao exam result released
விஏஒ தேர்வு முடிவுகள் வெளியீடு


கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான 813 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான (விஏஒ) தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வில் கலந்துகொண்டு, இப் பதவிக்கான அறிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாதவர்களின் மதிப்பெண்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை ,வகுப்பு வாரியான தரவரிசை நிலையும், சிறப்புப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசையும் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை இணையதளத்தில் பதிவு செய்து தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

இதில் தேர்ச்சி பெற்றவர்கள் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்புக்கு அழைக்கப்படுவர். தொடர்ந்து, விதிகளின் அடிப்படையில், அதன்பின்னர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பக்கல்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அடுத்த செய்தி