ஆப்நகரம்

வர்தா புயல்: தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

வர்தா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

TNN 11 Dec 2016, 1:52 pm
சென்னை: வர்தா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
Samayam Tamil vardah cyclone discussion in secretriat
வர்தா புயல்: தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம்


கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி சில நாட்களுக்கு முன்னர் புயலாக மாறியது. இந்த புயலுக்கு "வர்தா" என பெயரிடப்பட்டது.

இந்த புயலானது ஆந்திர மாநிலம் நெல்லூர் - காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் அப்புயலானது திசை மாறி, சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளது எனவும், நாளை பிற்பகல் சென்னைக்கு மிக அருகில் கரையை கடக்கவுள்ளது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மற்றும் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். வர்தா புயல் கரையை கடக்கும் போது 100கி.மீ வேகத்தில் காற்று வீசும் அபாயம் உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், வானிலை மையத்தின் எச்சரிக்கையையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் ராமமோகனராவ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Vardah Cyclone: Discussion in Secretriat

அடுத்த செய்தி