ஆப்நகரம்

'வர்தா' புயல் : முதல்வரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்

முதல்வர் பன்னீர் செல்வம் டெல்லி சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து வர்தா புயல் பாதிப்புக்களுக்கு முதற்கட்டமாக ரூ.10ஆயிரம் கோடி நிவாரணநிதி பெற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 13 Dec 2016, 11:34 pm
சென்னை: முதல்வர் பன்னீர் செல்வம் டெல்லி சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து வர்தா புயல் பாதிப்புக்களுக்கு முதற்கட்டமாக ரூ.10ஆயிரம் கோடி நிவாரணநிதி பெற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil vardha strom stalin demand tn cm
'வர்தா' புயல் : முதல்வரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்


வர்தா புயலால் வட கடலோர மாவட்டங்களான சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். வர்தா புயலின் விளைவால் அங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தும், மின்கம்பங்கள் கீழே விழுந்து கிடங்கின்றனர்.

வர்தா புயலால் சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளனர். இந்தநிலையில் வர்தா புயலில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முதல்கட்டமாக மத்திய அரசிடம் இருந்து ரூ.10ஆயிரம் கோடி நிவாரணம் பெற வேண்டும் என்று முதல்வர் பன்னீர் செல்வத்தை தமிழக ஏதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் டெல்லி சென்று @PMOIndia மற்றும் @rajnathsingh சந்தித்து #Vardah பாதிப்புகளுக்கு முதற்கட்டமாக ரூ.10,000கோடி நிவாரணநிதி பெற வேண்டும் — M.K.Stalin (@mkstalin) December 13, 2016
இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ," முதல்வர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைசர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வர்தா புயல் பாதிப்புகளுக்கு முதற்கட்டமாக ரூ.10,000கோடி நிவாரணநிதி பெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி