ஆப்நகரம்

வர்தா புயல் : அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

வர்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசு உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

TNN 11 Dec 2016, 5:18 pm
சென்னை : வர்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசு உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
Samayam Tamil varta storm tn cm discusses with government officials
வர்தா புயல் : அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை


தென்கிழக்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள வர்தா புயலானது நேற்று மாலை 5.30 மணியளவில் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இதனால் தென்கடலோர ஆந்திரா மற்றும் வடக்கடலோர தமிழகப்பகுதிகளில் கன மழை மற்றும் மிக கன மழைப் பெய்யக்கூடும்.

வர்தா புயலானது சென்னை, ஓக்கனேக்கல் இடையே 12-ம் தேதி பிற்பகல் அல்லது மாலை கரையை கடக்கும் என ஏதிர்பார்க்கப்படுகிறது. வர்தா புயல் கரையை கடக்கும் போது தமிழக வடக்கடலோர மாவட்டங்களில் 70 முதல் 80 கி.மீ வேகத்திற்கு காற்று வீசும் என்றும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் வர்தா புயல் முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் பன்னீர் செல்வம் ,அரசு உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.


வர்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை. — AIADMK (@AIADMKOfficial) December 11, 2016

அடுத்த செய்தி