ஆப்நகரம்

மோடியிடம் இந்த கேள்விக்கு பதில் இருக்கா ? திருமா காட்டம்!

பிரதமர் உரை குறித்து திருமாவளவன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 14 May 2020, 9:22 am
கொரோனா பரவல் காரணமாக நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.
Samayam Tamil திருமா


பொருளாதாரத்தை மீட்கவும், தொழில்களுக்கு புத்துயிர் கொடுக்கவும் ரூ.20 லட்சம் கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஆனால் அந்த அறிவிப்புகள் அடித்தட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இல்லை என பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பிரதமரின் உரையும் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா: இது உச்சம் இல்லைன்னா எதுதான் உச்சம்?

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மத்திய அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “முழு அடைப்பால் இதுவரை ஏற்பட்டுள்ள பயன்கள் என்ன? பாதிப்புகள்என்ன? மேலும் முழுஅடைப்பை நீட்டிப்பதற்கான தேவை என்ன? கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா? இல்லையா? எடுக்கப்பட்டுள்ள தடுப்புநடவடிக்கைகள் என்ன? இவைதானே மோடியின் உரையில் முதன்மையாக இடம் பெற்றிருக்கவேண்டும்?

மருத்துவக்கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு மேம்படுத்தப்பட்டுள்ளன? களத்தில் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள்,சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்றோரின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இவைதானே பிரதமரின் உரையில் முதன்மையாக இடம்பெற்றிருக்க வேண்டும்?

ஜாடிக்கு ஏற்ற மூடி; எடப்பாடிக்கு ஏற்ற? டி.ஆர்.பாலு இப்படியொரு கண்டன அறிக்கை!

புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், சாலையோரங்களில் கிடப்போர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள்,அகதிகள் போன்றோரின் உயிர்ப் பாதுகாப்புக்கும் அவர்கள் கொரோனாவிலிருந்து தப்பிப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்என்ன? இவைதானே பிரதமரின் உரையில் முதன்மையாக இடம்பெற்றிருக்கவேண்டும்?



மாநிலஅரசுகளுக்கு செய்துள்ளஉதவிகள், வழிகாட்டுதல்கள்என்ன? இந்தியாவிலேயே புலம்பெயரந்தவர்கள், அயல்நாடுகளில் சிக்கியிருப்பவர்கள் தொடர்பாக மாநிலஅரசுகள் செய்யவேண்டியவைஎன்ன? அதற்கு மைய அரசு எடுத்துள்ள முயற்சிகள்என்ன? இவைதானே பிரதமரின் உரையில் முதன்மையாக இடம்பெற்றிருக்கவேண்டும்" என்று கேட்டுள்ளார்.

அடுத்த செய்தி