ஆப்நகரம்

தேவர் ஜெயந்தியில் கலந்துகொண்ட விசிகவினர்!

முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜை நிகழ்வில் முதன்முறையாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Samayam Tamil 31 Oct 2020, 6:44 am
முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜை, ஆண்டுதோறும் தென் மாவட்டங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து கட்சியினரும் அமைப்புகளும் கலந்துகொண்டாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இதுவரை கலந்துகொண்டது இல்லை.
Samayam Tamil vck muthuramalingam thevar


நேற்றைய தினம் (அக்டோபர் 30) 113ஆவது ஜெயந்தியும் 58ஆவது குரு பூஜையையும் முன்னிட்டு, தேனி மாவட்டம் பங்களா மேடு பகுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் குருபூஜை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முதன்முறையாக கலந்துகொண்டுள்ளனர்.

தேனி கிழக்கு மாவட்ட விசிக மாவட்டச் செயலாளர் நாகரத்தினம் தலைமையில் இரு வாகனங்களில் சுமார் 20 பேர் சென்று முத்துராமலிங்கத் தேவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு அன்னதானத்தைத் தொடங்கி வைத்துள்ளனர். முன்னதாக அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.

ட்விட்டரில் போலி ட்ரெண்டிங்: வசமாக சிக்கிய பாஜக - திமுக பதிலடி!

தென் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு குருபூஜை நிகழ்வுகளால் எப்போதும் பதட்டமான சூழல் நிலவும். சாதி மோதல்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால் இது போன்ற நிகழ்வுகளில் காவல்துறையினர் அந்தப் பகுதிகளில் குவிக்கப்படுவர்.

வேல் யாத்திரை நடத்தும் பாஜக இதற்கு ஆதரவு அளிக்குமா?

இதுபோன்ற சூழல் நிலவக்கூடாது என்பதற்காகவே நல்லிணக்கத்தை பேணும் விதமாக குருபூஜை நிகழ்வில் கலந்துகொண்டதாக தேனி விசிகவினர் தெரிவிக்கின்றனர். அக்கட்சி தலைமையின் அனுமதி பெற்றே கலந்துகொண்டதாக தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி