ஆப்நகரம்

முனைவர் பட்டம் பெற்றார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை எம்.பியும் ஆன திருமாவளவன், 1980களில் நெல்லை மீனாட்சிபுரத்தில் தலித் குடும்பத்தினர் சிலர், இஸ்லாம் மதத்துக்கு மாறியது குறித்து முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி மேற்கொண்டார்.

Samayam Tamil 23 Aug 2019, 11:48 am
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 27-வது பட்டமளிப்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் முனைவர் பட்டம் பெற்றார்.
Samayam Tamil முனைவர் பட்டம் பெற்றார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்!
முனைவர் பட்டம் பெற்றார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்!


1981-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சுமார் 200 குடும்பத்தினர், இந்து மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறினர். அது அப்போது பெரும் பிரச்சனையாக பேசப்பட்டது.

அப்போது பாஜக தலைவர் வாஜ்பாய், காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் யோகேந்திரா மந்த்லானா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளையபெருமாள் போன்றவர்கள் அக்கிராமத்திற்கு நேரிடையாக சென்றனர்.

எல்இடி பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு; உச்சகட்ட பாதுகாப்பில் கோவை!!

இதுதொடர்பாக ‘மீனாட்சிபுரம் மதம் மாற்றம் - பாதிக்கப்பட்டோரின் பார்வை’ என்கிற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை எம்.பியும் ஆன திருமாவளவன், முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி மேற்கொண்டார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் குற்றவியல் துறையில், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சொக்கலிங்கம் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலில் இந்த ஆய்வை திருமாவளவன் மேற்கொண்டார். இதற்கான நேர்முக தேர்வில் பங்கேற்று விளக்கங்களையும், ஆய்வு முடிவையும் அவர் தெரிவித்திருந்தார்.

ஹெச்எஸ்பிசி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம்
இந்நிலையில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 27வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, 713 பேருக்கு நேரடியாக பட்டங்களை வழங்கினார்.

இந்த விழாவில், தொல். திருமாவளவனுக்கு டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்கப்பட்டது. திருமாவளவன் முனைவர் பட்டம் பெறும் புகைப்படங்களை பலரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட அந்த ரகசிய கேள்விகள் இவைதான்!!

அடுத்த செய்தி