ஆப்நகரம்

தமிழகத்தில் காய்கறிகள் விலை சரிவு

வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் காய்கறிகள் விலை சரிவடைய தொடங்கியுள்ளது.

TNN 4 Jul 2016, 10:21 pm
வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் காய்கறிகள் விலை சரிவடைய தொடங்கியுள்ளது.
Samayam Tamil vegetable prices started to decrease in tamil nadu
தமிழகத்தில் காய்கறிகள் விலை சரிவு


தமிழகத்தில் காய்கறி உற்பத்தி எதிர்பார்த்தபடி இருந்தபோதிலும், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் கோடை வெயில் சுட்டெரித்த காரணமாக, விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டது. இதேகாலத்தில், வெளிமாநில வரத்தும் குறைந்ததால், காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், விலையும் கிடுகிடுவென உயர தொடங்கியது.

குறிப்பாக, தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.100க்கும் மேல் அதிகரித்தது.

இந்நிலையில், கடந்த ஒருவாரமாக, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தில் காய்கறிகள் விலை படிப்படியாகக் குறைய தொடங்கியுள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ரம்ஜான் பண்டிகைக்குப் பின்னர், காய்கறிகள் விலை மேன்மேலும் சரிவடையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி